-
-
-
-
அறியப்படவேண்டிய தமிழகம்
₹80.00தொல்லியல் அகழாய்வுகளிளும், செப்புப் பட்டயங்களிலும், கோயிற் சுவர்களிலும், மண்டபங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டு களிலும், ஓலைச்சுவடிகளிலும், சிற்பங்களிலும் பொதிந்து கிடக்கின்ற செய்திகளை ஆராய்வது மட்டும் தமிழினத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளப் போதுமானது அல்ல; மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்கின்ற, வழி வழியாக, தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்க்கப்பட்ட இயல்பான நாட்டார் கதைகளும், இசை, நடன, நாடகக் கூத்துக் கலைகளும் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற செய்திகளை அலசுவதும், அவற்றைப் புரிந்துகொள்ள எடுக்கப்படும் முயற்சிகளும் கூட வரலாற்றுத் தகவல்கள்தான். இவை மட்டுமே வரலாற்றை அறிந்து கொள்ள போதுமா என்றால், இவற்றிற்கும் மேலாக சமூகத்தையும், தனி மனிதரையும் வாசித்துப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வரலாற்று ஆய்வுகளுக்கு ஏராளமான தரவுகளை வழங்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்
-
-
-
இலங்கை -எழுதித் தீராச் சொற்கள்
₹300.00ரமாதேவி அவர்கள் இலங்கையின் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு, தான் இலங்கையில் பயணித்த போது சந்தித்த மக்களின் வாழ்வியலையும் பழக்கவழக்கங்களையும் பண்பாடு, சமையல், நகைச்சுவை, ஏக்கம், இயலாமை, தார்மீகக்கோபம் எனப் பல பக்கங்ளையும் பதிவு செய்திருக்கும் சிறந்த நூல்.
ரமாதேவி இரத்தினசாமி ஈழத்தின்மீது கொண்ட பெருங்காதலை இலங்கை – எழுதித் தீராச் சொற்களை வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.
”ஈழத்துக்காக வடித்த காதல் கடிதமாகவும் இதைக் கொள்ளலாம்” – என ரமாதேவி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
-
-
எண் பெயர் #கட்டியங்காரன்
₹170.00கொரோனா காலகட்டத்தில் பல இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும் உள்ளான கோடனகோடி மக்களின் வாழ்வியல் அணுபவங்களை பதிவுசெய்யும் விதமாகவும் விவாதிக்கும் விதமாகவும் அடுத்த பேரிடருக்கு நம்மை நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்குடனே இத்தொகுப்பு புனையப்பட்டுள்ளது.
-
-
-
-
-
கீழடி வைகை நாகரீகம்
₹199.00தமிழக வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, ஐரோப்பியத் தமிழியல்,”தமிழ்ப் பண்பாட்டு தேடல்கள், தமிழ் மக்கள் புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப் பன்முகத் தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர்.க.சுபாஷிணியின் தொல்லியல் அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல் இது. ‘உலக நாகரிகங்களின் வரிசை’ என்ற பொருளில் இந்த நூல் அடங்குகின்றது. தமிழின் தொன்மைக்குப் பெருமை சேர்க்கும் கீழடி அகழாய்வுச் செய்திகளை எளிய முறையில் இளம் சிறார்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் படைக்கப்பட்டூள்ளது. முனைவர்.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவராகவும் ‘கடிகை’ தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநராகவும் செயல்படூகின்றார். ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினி பொறியியல் நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளராக பணிபுரியும் இவர் உலகளாவிய வகையில் அருங்காட்சியகங்கள், வரலாறு, தொல்லியல் அகழாய்வு ஆகிய துறைகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். தொல்லியல் அகழாய்வு பற்றிய செய்திகளும் தக்க தரவுகளுடன் கூடிய தமிழர் வரலாறும் குழந்தைகளுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூல் வெளிவருகின்றது
கீழடி -
-
-
-
-
-
-
தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.










































