• (0)

    தமிழர் புலப்பெயர்வு

    உலகளாவிய தமிழரின் பயணங்களும், குடியேற்றங்களும் பற்றிய வரலாறு.

    தமிழர் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர். உலகத் தமிழரின் தொடர்ந்த பயணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?

    1. பண்டைய கிரேக்க ரோமானியரோடு வணிகம்
    2. பௌத்த சமய பரவலாக்கப் பின்னனி
    3. பல்லவர், சோழர், பாண்டியர் கால பயணங்கள்
    4. பொ.ஆ 14ஆம் நூற்றாண்டு கால பயணம் குறிப்பாக மரைக்காயர், லப்பை, சோளிய இஸ்லாமிய வணிகர்கள், தமிழ் வணிகர்களின் பயணங்களினால் ஏற்பட்ட புலம்பெயர்வு
    5. அச்சு இயந்திரம் – அச்சுப்பதிப்பாக்கம் உருவாக்கிய புலப்பெயர்வுகளுக்கான தேவைகள்
    6. அடிமை வணிகம் – இதன் வழி ஏற்பட்ட பேரளவிலான தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
    7. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
    8. யாழ்ப்பாணத் தமிழரின் ஆங்கிலேயர் காலனித்துவ கால புலப்பெயர்வுகள், இலங்கை போர் காலத்தில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள்..
    9. 20ஆம் நூற்றாண்டில் – பர்மா மக்கள் நாடு திரும்புதல், மத்திய கிழக்காசியா, ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இந்திய நாடுகடந்த அரசு
    10. உலகத் தமிழாய்வுகளில் தனிநாயகம் அடிகளின் பங்களிப்புகள், அண்மைய புலம்பெயர்வுகள், இன்றைய நிலை

    என 10 அத்தியாயங்களில் தமிழரின் 2500 ஆண்டுகால புலப்பெயர்வுகளை விவரிக்கின்றது இந்த நூல்.

    500.00
  • (0)

    பாதை அமைத்தவர்கள்

    வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து, பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு. திரைப்படம், பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல், கல்வி, விமானப் படை பணி, உளவுத் தொழில், பட்டயக் கணக்கு, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார்.
    நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேதிதா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனத்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது – அம்பை

    300.00
  • (0)

    இலங்கை -எழுதித் தீராச் சொற்கள்

    ரமாதேவி அவர்கள் இலங்கையின் வரலாற்றைத் தொட்டுக்கொண்டு, தான் இலங்கையில் பயணித்த போது சந்தித்த மக்களின் வாழ்வியலையும் பழக்கவழக்கங்களையும் பண்பாடு, சமையல், நகைச்சுவை, ஏக்கம், இயலாமை, தார்மீகக்கோபம் எனப் பல பக்கங்ளையும் பதிவு செய்திருக்கும் சிறந்த நூல்.

    ரமாதேவி இரத்தினசாமி ஈழத்தின்மீது கொண்ட பெருங்காதலை இலங்கை – எழுதித் தீராச் சொற்களை வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

    ”ஈழத்துக்காக வடித்த காதல் கடிதமாகவும் இதைக் கொள்ளலாம்” – என ரமாதேவி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    300.00
  • (0)

    அகம்

    300.00
  • (0)

    மட்டக்களப்பு

    இலங்கை மட்டக்களப்பின் வரலாறு, சமூகம், பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக வந்திருக்கும் ஆய்வு நூல். இலங்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய ஒரு நூல்.

    280.00
  • -10%
  • (0)

    திருவள்ளுவர் யார்?

    திருவள்ளுவர் யார் – என்னும் இப்புத்தகம் இதுகாறும் கவனிக்கப்படாத திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. மேலும் திருவள்ளுவர் மீது கட்டமைக்கப்பட்ட புனைக்கதைகளின் தோற்ற த்தினையும் அக்கதைகளின் அசலான பதிப்புகளையும் முழுமையாக ஆராய்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தனக்கான உண்மை வரலாற்றை புதியக் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பினை இப்புத்தகம் தருகிறது. திருவள்ளுவர் எவ்வாறு தனி மனத்தினை நிறுவியுள்ளார் என்பதை முதன் முறையாக ஆய்வுக் எடுத்துக் கொள்கிறது இந்தப் புத்தகம்.

    200.00
  • (0)

    கீழடி வைகை நாகரீகம்

    தமிழக வரலாறு, வரலாற்றுப்‌ பாதுகாப்பு, ஐரோப்பியத்‌ தமிழியல்‌,”தமிழ்ப்‌ பண்பாட்டு தேடல்கள்‌, தமிழ்‌ மக்கள்‌ புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப்‌ பன்முகத்‌ தேடல்களுடன்‌ இயங்கி வரும்‌ முனைவர்‌.க.சுபாஷிணியின்‌ தொல்லியல்‌ அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல்‌ இது. ‘உலக நாகரிகங்களின்‌ வரிசை’ என்ற பொருளில்‌ இந்த நூல்‌ அடங்குகின்றது. தமிழின்‌ தொன்மைக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ கீழடி அகழாய்வுச்‌ செய்திகளை எளிய முறையில்‌ இளம்‌ சிறார்கள்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ இந்த நூல்‌ படைக்கப்பட்டூள்ளது. முனைவர்‌.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ்‌ மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்‌ தலைவராகவும்‌ ‘கடிகை’ தமிழ்‌ மரபு முதன்மைநிலை இணையக்‌ கல்விக்‌ கழகத்தின்‌ இயக்குநராகவும்‌ செயல்படூகின்றார்‌. ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின்‌ ஐரோப்பியப்‌ பகுதி கணினி பொறியியல்‌ நிர்வாகப்‌ பிரிவின்‌ பொறுப்பாளராக பணிபுரியும்‌ இவர்‌ உலகளாவிய வகையில்‌ அருங்காட்சியகங்கள்‌, வரலாறு, தொல்லியல்‌ அகழாய்வு ஆகிய துறைகளிலும்‌ தொடர்ந்து செயல்பட்டு வருபவர்‌. தொல்லியல்‌ அகழாய்வு பற்றிய செய்திகளும்‌ தக்க தரவுகளுடன்‌ கூடிய தமிழர்‌ வரலாறும்‌ குழந்தைகளுக்கும்‌ சென்று சேரவேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ இந்த நூல்‌ வெளிவருகின்றது

    கீழடி
    199.00
  • (0)

    தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

    தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது.
    இதில்..

    • -ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
    • -நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
    • -நவீன மனிதர்கள்
    • -வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
    • -விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
    • -ஸ்டெப்பி புல்வெளி – யம்னயா
    • -இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
    • -இந்திய மரபியல் ஆய்வுகள்
    • -இந்திய சமூக அமைப்பு

    இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.

    அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.
    180.00